எங்களைப் பற்றி


அக்ரஹாரா காப்பீட்டை பொதுத் துறைக்கு வழங்குவதற்காக NITF ஆனது சட்டப்படியான அங்கமாக 2006இல் ஸ்தாபிக்கப் பட்டது. நாங்கள் தனிப் பட்ட நலன்களுக்கான திட்டங்கள் மற்றும் பொது காப்பீட்டு துறையின் அனைத்து பகுதிக்குமான காப்பீட்டை வழங்குகிறோம். NITF ஆனது அரச ஊழியர்களுக்கு அக்ரஹாரா மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வழங்குவதன் மூலம் ஒரு புதிய சாகாப்தத்தை காப்பீடு துறையில் அறிமுகப் படுத்தியுள்ளது. நாங்கள SRCC &T என்ற நிதி மூலம் வேலைநிறுத்தம், கலக்கம், சிவில் கிளர்ச்சி மற்றும் பயங்கரவாதம் போன்ற அபாயங்களுக்கு காப்பீடு வழங்குகிறோம். முழு நாட்டிலும் எங்கள் நிறுவனம் மட்டுமே மறுக் காப்பீட்டு சேவையை வழங்குகிறது என அறிவிப்பதில் நாம் பெருமையடைகிறோம். ஆளும் அரசாங்கம் மற்றும் வர்த்தமானி அறிவித்தலின் படி அனைத்து முதன்மை காப்பீடுகளும் தங்கள் மொத்த கடன் பொறுப்பில் இருந்து 30% வீதத்தை மறுக் காப்பீட்டு பிரிவுக்கு கொடுப்பதாவது கட்டாய அமர்வாகும். NITF ஆனது தலைமுறைகளாக சிறந்த சுழற்சியுடைய கோரிக்கைகளை கொண்டுள்ளதையும் விதிவிலக்குகளை அதி வேகமாகவும் வணிக விதிகளின் படி கையாளுவதிலும் பெருமை கொண்டுள்ளது.
மக்கள் மற்றும் நிறுவனத்தை மேலும் அறிவுடையதாக்கவும், திறமையாக்கவும் மற்றும் இலாபகரமாக்கவும் நாங்கள் ஒரு புதிய தொழில் நுட்பத்தை ஏற்றுள்ளோம். வைத்தியசாலை கட்டணங்களை எளிதாக மற்றும் உடனடியாக தீர்ப்பதற்க்கு நாம் ஒரு மின்னணு அட்டையை அறிமுகப் படுத்தியுள்ளோம். தற்போது NITF ஆனது அனுராதபுரம் மற்றும் ஹம்பந்தோட்டையில் தனது கிளை வலையமைப்பை விஸ்தரித்துள்ளது.

எங்கள் தூரநோக்கு

<<<<<<<<" தேவைப் படுகின்ற அனைத்து துறைகளுக்கும் பாதுகாப்பு- வலை மற்றும் பாதுகாப்பு”>>>>>>>>

எங்கள் நோக்கம்

இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றதிற்கு பின்வருவன ஊடாக பங்கேற்றல்:

 • சமூகத்தின் அனைத்து தேவையுள்ள பிரிவுகளில் உள்ளவர்களுக்கு மலிவான, பயனுள்ள, திறமையான மற்றும் முற்ப் போக்கான காப்பீட்டு திட்டங்களை வழங்குதல்.
 • நிதியளிப்பதன் மூலம் மாறிவரும் தேவைகள் மற்றும் பிற ஏற்பாடுகளினால் ஏற்படும் உயர் அபாயங்களிடமிருந்து உள் நாட்டு சந்தைகளுக்கு ஆலோசனை வழங்குதல்.
 • இலங்கையில் மறுக் காப்பீட்டு சந்தையை அளித்து, உள்ளூர் காப்பீட்டு சந்தைக்கு கூடுதல் திறனை வழங்குதல்.
 • நிறுவன விவரம்

  இலங்கை குடிமக்களின் வாழ்வாதாரத்தை உயர்துவதற்க்கு NITF ஆனது இல.28 of 2006 சட்டத்தின் கீழ் கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் கீழ் நிறுவப் பட்டது. இந்த நிறுவனமானது பொது மக்கள் மற்றும் அரச சேவை உத்தியோகத்தர்களை சுகாதார, தனிப்பட்ட, விபத்துக்கள், மரணம் மற்றும் எதிர்பாராத சொத்து இழப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாக்க தேவையான திட்டங்களை செயல்ப்படுத்துவதற்க்கு நிறுவப்பட்டதாகும்.
  தற்போது NITF ஆனது அக்ரஹார, மோட்டார், SRCC & பயங்கரவாதம், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மறுக்காப்பீடு போன்ற பல காப்பீடு திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது. NITF ஆனது, பொது காப்பீட்டு தேவைகள் அனைத்தையும் வகுப்புக்கள் ஒதுக்கீடு குறித்தும் பொது மக்களுக்கு தனது சேவையை 1ம் திகதி செப்டம்பர் 2009 முதல் நீட்டிக்கப் பட்டுள்ளது.
  நீங்கள் கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சகம் வலைதளத்தை பார்வையிடலாம் மூலம்:  www.mnper.gov.lk

  NITF சட்டங்கள்

  ஆண்டு அறிக்கைகள்

  2016 அறிக்கைகள் பதிவிறக்கம்

  2015 அறிக்கைகள் பதிவிறக்கம்

  2013 அறிக்கைகள் பதிவிறக்கம்

  2012 அறிக்கைகள் பதிவிறக்கம்