பயிர் காப்பீடு


பயிர் காப்பீடு ஆனது இயற்கை பேரழிவுகள், காட்டு யானை தாக்குதல் என ஆபத்துக்களுக்கு எதிராக தங்களை பாதுகாக்க, விவசாய உற்பத்தியாளர்கள் அதாவது நெல் விவசாயிகளால் இக் காப்பீடு வாங்கப் படும்.

தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் ஆனது மேற்க் குறிப்பிட்ட அபாயங்களிலிருந்து விவசாயிகளை பாதுகாத்து அவர்களுக்கு வலுவூட்ட முன் வந்துள்ளது. யால மற்றும் மஹா அறுவடை காலங்களின் போது பயிர்கள் மறைக்கப் படும்.

கோரல் கொடுப்பனவு:

பிராந்திய பயிர் காப்பீடு மதிப்பீட்டுக் குழுவின் சிபாரிசு ஆனது, பிராந்திய விவசாய வளர்ச்சி அதிகாரியினால், மாவட்ட கமநல அபிவிருத்தி சேவைகள் துணை கமிஷனருக்கு அனுப்பப் பட வேண்டும். கோரல் கொடுப்பனவுடன் மாவட்ட கமநல அபிவிருத்தி சேவைகள் துணை கமிஷனரின் எழுத்துப் பூர்வ அனுமதி பெறுவது கட்டாயம் ஆகும், மற்றும் அனுமதித்த முழுத் தொகையும் காப்பீட்டாளரின் வங்கி கணக்கில் வைப்பில் இடப் படும்

யாருக்காக:

இத் திட்டமானது உரங்களுக்கு மானியம் பெரும் அனைத்து விவசாயிகளுக்கும் கட்டாயமானதாகும். விவசாயிகள் 50kg உரங்கள் கொள்வனவு செய்தால் ருபாய் 150/= அவர்களுக்கு உரிமை ஆகும். இதை ருபாய் 3.00/= இற்கு 1kg ஆக வரையறுக்கப் பட்டால், கட்டாயமான கட்டணத் தொகையுடன் NITF திட்டத்தின் கீழ் காப்பீட்டாளர் ஆகிறார்.

நன்மைகள்:


நிலை 1 நிலை 2 நிலை 3
அதிகபட்சம் நிவர்த்தி அளவு
  30 நாட்களுக்குள் பயிர் செய்தல் நிவர்த்தி அளவு 40%
  பயிர் செய்த 31 ஆவது நாளில் இருந்து பூக்கும் வரைக்கும் 40% நிவர்த்தி அளவு
  பூத்ததிலிருந்து அறுவடை நிலை வரைக்கும் 100%
1 ஏக்கர்
  ருபாய். 4,000.00
  ருபாய். 6,000.00
  ருபாய்.10,000.00
1 ஹெக்டேருக்கு
  ருபாய். 10,000.00
  ருபாய். 15,000.00
  ருபாய். 25,000.00

இழப்பீட்டுக் கோரிக்கை :

கோரிக்கை விண்ணப்ப படிவமானது விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்ப்பத்தி உதவியாளரிடமிருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப படிவமானது சரியாக நிரப்பப் பட்டு விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்ப்பத்தி உதவியாளர், மாகவலி அதிகார பிரிவு மேலாளர் அல்லது நீர்பாசனத் துறை திட்ட மேலாளரிடம் சேதம் விளைந்த 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்ப்பத்தி உதவியாளர் அல்லது மகாவலி அதிகார பிரிவு மேலாளர் விவசாய அமைப்பு தலைவர் மற்றும் செயலாளருடன் சேர்ந்து விவரங்களை சரி பார்க்க வேண்டும். இந்த உறுதிப் படுத்தல் பிராந்திய, விவசாய வளர்ச்சி அதிகாரிக்கு அனுப்பப் படல் வேண்டும்.

பிராந்திய விவசாய வளர்ச்சி அதிகாரி கோரிக்கையை பதிவு செய்து விவரங்களை சரி பார்க்க வேண்டும். பின்னர் தீர்வுக்காக உரம் பெறும் விவசாயிகளின், விவசாயிகளுக்கான பிராந்திய பயிர் காப்பீடு மதிப்பிடும் குழுவிற்கு அனுப்பி வைக்கப் பட வேண்டும்.

பயிர் காப்பீடு தீர்வை

பொறுப்பு

ஒவ்வொரு நிறுவனமும் பயிர் காப்பீடு தீர்வையை பின்வருவனவின் வரம்பின் கீழ் செலுத்த வேண்டும்:
 • (i) வங்கி சட்டம், இல. 30 ஒப் 1988
 • (ii)நிதி கம்பனிகள் சட்டம், இல. 78 ஒப் 1988 அல்லது
 • (iii)காப்பீட்டுத் துறை கட்டுப்பாடுகள் சட்டம், இல. 43 ஒப் 2000

 • நிதி சட்டம் இல. 12 ஒப் 2013 பிரிவின் படி மேற்க் குறிப்பிட்ட சட்டங்களின் கீழ் பதிவு செய்யப் பட்ட எல்லா வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அல்லது காப்பீடு நிறுவனங்களும் NITF இன் காப்பீட்டு தீர்வை செலுத்துவதற்க்கு பொறுப்பாகும்.

  அடித்தளம்

  மதிப்பீட்டு ஆண்டின் வரிக்கு பின்னரான இலாபத்திலிருந்து 1% வீதம் ( எந்த ஆண்டிலிருந்து சரி ஏப்ரல் முதல் நாள் தொடக்கதிலிருந்து உடனடியாக வருகின்ற அடுத்த ஆண்டின் மார்ச் முப்பத்து ஓறாம் நாள் வரை)

  நடைமுறைப்படுத்திய திகதி

  பயிர் காப்பீடு தீர்வை 01.04.2013 அன்று அல்லது அதற்கு பிறகு எழும் இலாபம் மீது செலுத்த வேண்டும்.

  காலாண்டு பொறுப்புக் கணக்கீடு

  ஒவ்வொரு காலாண்டிலும் வரிக்குப் பின்னரான மதிப்பிடப்பட்ட இலாப அடிப்படையில் தீர்வை கணக்கிடப்பட வேண்டும். வரிக்கு பின்னரான மதிப்பிடப்பட்ட இலாபம் ஒவ்வொரு காலாண்டிலும் பின்வருவனவில் ஒன்றாக இருக்க முடியும்::
 • உடனடியான முந்திய ஆண்டு, வரி செலுத்திய பின்னர் இலாபத்தில் 1/4 பங்கு அல்லது
 • தொடர்புடைய காலாண்டில் கணக்கிடப்படும் உண்மையான இலாபத்திலிருந்து (உண்மையான இலாபம் விசாரித்து அறியக் கூடியதாக இருந்தால் மட்டும்)

 • மதிப்பீட்டு ஆண்டு இறுதியில் உண்மையான பொறுப்பு மதிப்பிடல்.

  உண்மையான பொறுப்புடன் மொத்த கடன் பொறுப்பு சரிப்பார்த்தல் செய்வதானது, மதிப்பீட்டு ஆண்டிற்கான வருடாந்திர கணக்குகள் (தணிக்கை) இறுதி வடிவம் பெற்றப் பின் ஆகும். மேலும் சரிப் பார்த்தப்பின் கூடும் பொறுப்புக்களை உடனடியாக அடுத்து வரும் மதிப்பீட்டு ஆண்டின் 30ம் திகதி செப்டம்பர் அன்று அல்லது அதற்க்கு முன்பாக செலுத்த வேண்டும்.
  அதிகப் படியாக செலுத்திய கட்டணம் ஆனது திருப்பி தரப் பட மாட்டாது. மாறாக விரைவில் வரக் கூடிய அடுத்த ஆண்டு/ஆண்டுகள் இன் செலுத்த வேண்டிய தீர்வையில் கழிக்கப் படும்.

  தவறுதல் அபராதம்

  தீர்வை அல்லது அதின் ஒரு பகுதியை இறுதி நாள் அல்லது அதற்கு முன்பாக செலுத்த தவறினால், அபராதம் விதிக்கப் படும். இவ் அபராதம் ஆனது செலுத்த வேண்டிய தீர்வைக்கு மேலதிகமாக விதிக்கப் படும். உடனடியாக அடுத்து வரும் மதிப்பீட்டு ஆண்டுகளில் 30ம் திகதி செப்டம்பர் இல் அல்லது அதற்கு முன்னால் குறைந்தது 1/4 பங்கு இறுதி பொறுப்பு கட்டணம் உட்பட்ட (எவையேனுமிருப்பின்) தீர்வை செலுத்தி இருந்தால் அபராதம் விதிக்கப்பட மாட்டாது.

 • 10% வீதத்துக்கு இணையான தீர்வை அபராதம், செலுத்த வேண்டிய கட்டணத்தின் முதல் 30 நாட்களில் விதிக்கப் படும்.
 • மேலும், இரண்டு சதவீத தீர்வை ஒவ்வொரு மேலதிக முப்பது நாட்கள் அல்லது அதன் ஒரு பகுதியாக காலத்திற்கும்,எனினும், முழு அபராத தொகை 50 வீதத்துக்கும் கூடாது ஜூலை 31ம் திகதி 2013 முன் காரணமாக இருந்த முதல் கால் முடிவடையும் 30ம் திகதி ஜூன் 2013 இற்கு, தீர்வை 31ம் திகதி அக்டோபர் 2013 அன்று அல்லது அதற்க்கு முன் 2ம் கால் முடிவடையும் 30ம் திகதி செப்டம்பர் 2013 இற்கு தனியாக செலுத்தி இருந்தால் முதல் கால் முடிவடையும் 30ம் திகதி ஜூன் 2013 இற்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது.


 • வருமானம் மற்றும் கொடுப்பனவுகள்

  பயிர் காப்பீடு தீர்வை வருமானம் மற்றும் கொடுப்பனவு ஆனது சம்பந்தப்பட்ட கால் இறுதி மாததில் 30ம் திகதிக்கு அடுத்து வரும் காலாண்டு மாதத்திற்கு முன்னர் அளிக்க வேண்டும்.

  1ல் காலாண்டு- ஏப்ரல்- ஜூன்- ஜூலை 30 க்கு முன்
  2ம் காலாண்டு- ஜூலை- செப்டம்பர்- அக்டோபர் 30க்கு முன்
  3ம் காலாண்டு- அக்டோபர்- டிசம்பர்- ஜனவரி 30க்கு முன்
  4ம் காலாண்டு- ஜனவரி- மார்ச்- ஏப்ரல் 30க்கு முன்

  உடனடியாக சம்பந்தப்பட்ட கால் இறுதியில், ஆண்டு வருமானத்துடன் செலுத்த வேண்டிய மிகுதி தொகையுடன் (இருந்தால்) மதிப்பீட்டு ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் திகதி அன்று அல்லது அதற்க்கு முன் அளிக்க வேண்டும். (உதாரணம்: மதிப்பீடு 2013/2014 ஆண்டு குறித்து, ஆண்டு வருமானம் 30ம் திகதி செப்டம்பர் 2014 அன்று அல்லது அதற்க்கு முன் அளிக்க வேண்டும்)
  காசோலை "national insurance trust fund க/இ. 033-2-003-0-2467951" என்பதற்கு ஆதரவவாக வரைய வேண்டும் மேலும் வருமானத்துடன் சேர்ந்து அளிக்க வேண்டும்.
  மேலதிக தகவலுக்கு திருமதி. காயத்ரி சொய்சா அவர்களை 011-3131111 என்ற தொலைபேசி எண் ஊடாக தொடர்பு கொள்ளுங்கள்.

  மேலதிக தகவல்கள்:

  புதிய பயிர் காப்பீடு சம்பந்தமாக தெரிந்துகொள்ள எங்களை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.
  தொலைபேசி : +94 112 026 600
  மின்-அஞ்சல் : anura@nitf.lk
  தொலைநகல் : +94112323006

  செய்தியை விடவும்


  பதிவிறக்கங்கள்

  கோரிக்கை படிவத்தை   இங்கே பதிவிறக்கம் செய்யவும்
  சிங்களம்/தமிழ் படிவத்தை   இங்கே பதிவிறக்கம் செய்யவும்
  சுற்றறிக்கையை   இங்கே பதிவிறக்கம்
  பயிர் காப்பீடு தீர்வை கூடுதல் சாதாரண வர்த்தமானியை   இங்கேபதிவிறக்கம் செய்யவும்

  உங்கள் கோரிக்கையை சரி பார்க்க

  உங்கள் கோரிக்கையை சரி பர்ர்க்க இங்கேஅழுத்தவும்