நிறுவன விவரம்
தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் 2006 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டம் தே. ந. பொ
. நி. ச) டின் மூலம் நிறுவப்பட்டுள்ளது. பொருளாதாரத்திற்கு அதன் பங்களிப்புக்களாக மீள்காப்புறுதி, பணிப் பகிஷ்கரிப்புகள், ஊழியர் கிளர்ச்சிகள் அல்லது
கலகங்கள், சிவில் யுத்தங்கள் மற்றும் பங்கரவாதம் போன்றவற்றுக்கான காப்புறுதிகள், அக்ரஹார மருத்துவக் காப்புறுதி, சுகாதாரக் காப்புறுதி, இயற்கை
அனர்த்தக் காப்புறுதி மற்றும் விவசாயக் காப்புறுதி உள்ளடங்கலாக ஏனைய வகையைச் சேர்ந்த சாதாரண காப்புறுதிகளுக்கும் அவசியப்படும் நிதி ஏற்பாடுகள்
வழங்கப்படுகின்றன. தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்துக்கமைய நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் முதலில் நிர்வாகிக்கப்பட்டு வந்த
காப்புறுதி நிதியத்தினால் பணிப் பகிஷ்கரிப்புகள், கிளர்ச்சிகள் அல்லது கலகங்கள், சிவில் யுத்தங்கள் மற்றும் பயங்கரவாதக் காப்புறுதியானது பின்னர்
தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் கையகப்படுத்திக் கொண்டுள்ளதோடு, தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்காக பணிப் பகிஷ்கரிப்புகள்,
கிளர்ச்சிகள் அல்லது கலகங்கள், சிவில் யுத்தங்கள் மற்றும் பயங்கரவாதம் போன்ற இழப்புச் சாத்தியங்களுக்கான காப்புறுதி வழங்கும் சகல காப்புறுதியுறுநர்களுக்கும்
அவர்கள் பெற்றுக் கொள்ளும் தவணைக் கட்டணம் தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்துக்கு அனுப்புதல் வேண்டும்.