PUBLIC DAY - NATIONAL INSURANCE TRUST FUND
We would like to inform you that Public Day will be held every Monday, starting from 10th etc...
நாங்கள் தனித்துவமான நன்மைத் திட்டங்களை வழங்குவதுடன், பொது காப்புறுதித் துறையில் அனைத்து பிரிவினருக்கும் பாதுகாப்பை வழங்குகிறோம். மக்களையும் அரசாங்கத்தையும் திறம்பட இணைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட புதிய தொழில்நுட்பங்களை நாங்கள் பின்பற்றுகின்றோம்.
தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியமானது 2006 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டது. பொருளாதாரத்திற்கான அதன் பங்களிப்பானது மறுகாப்புறுதி, வேலைநிறுத்தம், கலவரம், சிவில் கலவரம் மற்றும் அக்ரஹார மருத்துவக் காப்புறுதி, சுகாதாரக் காப்புறுதி, பயிர்க் காப்புறுதித் திட்டங்கள் உட்பட ஏனைய பொதுக் காப்புறுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். அனைத்து வகை பொதுக் காப்புறுதிகளையும் வழங்குவது தொடர்பில் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் தனது சேவைகளை பொதுமக்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
காப்புறுதித் துறையில் அனுபவம்
2023-01-01 முதல் 2023-12-31 வரை அரச ஊழியர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர்களின் 234,656 கோரிக்கைகள் தீர்க்கப்பட்டுள்ளன. இழப்பீட்டு மதிப்பு ரூ: 7325 மில்லியன் ஆகும்.
வாடிக்கையாளர் திருப்தி குறித்து நாங்கள் மிகவும் பிரக்ஞை பூர்வமாக உள்ளோம். இதைக் கருத்திற் கொண்டு, வாடிக்கையாளர் முறைப்பாடுகளைத் தீர்ப்பதற்கும், விரைவில் தீர்வு காண்பதற்கும் கீழே உள்ள நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.