சரிபாரப்பு    கோரிக்கை    தொடர்பு    FAQs

எங்களைப் பற்றி



















shape

BBB (lka)

FitchRating

எங்களைப் பற்றி

தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியமானது 2006 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டது. பொருளாதாரத்திற்கான அதன் பங்களிப்பானது மறுகாப்புறுதி, வேலைநிறுத்தம், கலவரம், சிவில் கலவரம் மற்றும் அக்ரஹார மருத்துவக் காப்புறுதி, சுகாதாரக் காப்புறுதி, பயிர்க் காப்புறுதித் திட்டங்கள் உட்பட ஏனைய பொதுக் காப்புறுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். அனைத்து வகை பொதுக் காப்புறுதிகளையும் வழங்குவது தொடர்பில் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் தனது சேவைகளை பொதுமக்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது.

எங்களை தொடர்பு கொள்ள: +94 112 026 600

தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் பொதுத்துறைக்கான அக்ரஹார காப்புறுதியை வழங்குவதற்கான ஒரு நியதிச்சட்ட நிறுவனமாக 2006 இல் நிறுவப்பட்டது. நாங்கள் தனித்துவமான நன்மைத் திட்டங்களை வழங்குவதுடன், பொது காப்புறுதித் துறையில் அனைத்து பிரிவினருக்கும் பாதுகாப்பை வழங்குகிறோம்.

தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் அனைத்து அரச அதிகாரிகளுக்கும் பொதுக் காப்புறுதித் திட்டங்களை வழங்குவதன் மூலம் காப்புறுதித் துறையில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது. எங்கள் எமது வேலைநிறுத்தம், கலவரம், சிவில் கலவரம் மற்றும் பயங்கரவாத நிதியத்தின் மூலம் அனைத்து வேலைநிறுத்தம், கலவரம், சிவில் கலவரம் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றிற்கான காப்பறுதியை வழங்கி வருகிறோம். 2012 டிசம்பர் 31ஆந் திகதிய 1791/4ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவிப்பின் படி, அனைத்து முதன்மைக் காப்புறுதியாளர்களும் இப்போது தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்திற்கு ஒவ்வொரு பொது மறுகாப்புறுதி ஒப்பந்தத்திலிருந்து எழும் தங்கள் மொத்த மறுகாப்புறுதி பிரீமியத்தில் 30% வழங்க வேண்டும். தற்போது, தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் முதன்மையான காப்புறுதியாளர்களுக்கு மறுகாப்புறுதித் திட்டத்தை வழங்கும் ஒரே இலங்கை அமைப்பாகும். எங்கள் வர்த்தக விதிகளின்படி, உரிமைகோரலைத் தீர்ப்பதற்கும், விதிவிலக்குகளை விரைவாகக் கையாளுவதற்கும், சேவையில் சில சிறந்த திருப்பங்களைக் கொண்டிருப்பதில் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் பெருமிதம் கொள்கிறது.

எமது தொலைநோக்கு

" அனைத்துத் தேவையுடைய காபபுறுதித் துறைகளுக்கும் பாதுகாப்பான வலையமைப்பினையும் பாதுகாப்பினையும் அளித்தல். "

எமது பணி

கீழ்க்காணும் செயற்பாடுகளினூடாக இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்பினை வழங்குதல் :

  • சமூகத்திலுள்ள அனைத்து காப்புறுதி தேவையுடைய துறைகளுக்கும் கட்டுப்படியான, வினைத்திறன் வாய்ந்த மற்றும் முன்னேற்றகரமான காப்புறுதி செயற்திட்டங்களை வழங்குதல்.

  • ஓன்றிணைந்து செயற்படுதல் மற்றும் ஏனைய ஏற்பாடுகளினூடாக மாறிவரும் தேவைகளிலிருந்து எழுகின்ற உயர்ந்தளவிலான இடர்களினை ஈடு செய்யும் வகையில் உள்நாட்டு சந்தைகளுக்கான தீர்வுகளினை வழங்குதல்.

  • உள்நாட்டு காப்புறுதி சந்தைக்கு மேலதிக சக்தியினை வழங்கும் நோக்குடன் இலங்கையில் மீள் காப்புறுதிச் சந்தையினை உருவாக்குதல்.


தலைவர்களின் வரலாறு



Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image

திருமதி சாகல அபயவிக்ரம் 2023 இல் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தில் இணைந்தார். நிதியத்தின் வரலாற்றில் முதல் பெண் தலைவரான அவர், நிதியத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு திறமையான ஊழியர்களை நியமித்தார். தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞரான அவர், பல சட்ட சவால்களுக்கு தீர்வுகளை வழங்கினார். திங்கட்கிழமைகளை பொதுமக்கள் நாளாக நியமித்ததன் மூலம் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்திற்கு பொதுமக்கள் அணுகலுக்கு வழிஏற்படுத்திய முன்னோடியாவார். மேலும், அக்ரஹார உரிமைகோரல்களை பத்து நாட்களுக்குள் செயற்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தினார். அவரது தலைமையின் கீழ், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் எரிபொருள் நெருக்கடியின் போது உருவான பின்னடைவு வெற்றிகரமாக தீர்க்கப்பட்டது.










திருமதி சாகல அபயவிக்ரம

2023 - 2024

திரு. மவாஹிப் மௌஜூத் 2020 இல் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தில் தலைவராக இணைந்துகொண்டார். கோவிட்-19 தொற்று நோய் நிலைமை காரணமாக பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், அவற்றை திறமையாக வெற்றிகொண்டார். அவர் அரசு மற்றும் தனியார் துறைகளில் அனுபவம் பெற்றவர். அவர் பணிபுரிந்த சில நிறுவனங்களில் பணிப்பாளர் மற்றும் பதில் தலைவர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA); பணிப்பாளர், ‘மக நெகும’ பணிப்பாளர் சபை உறுப்பினர், இலங்கை தேயிலை சபை உறுப்பினர், தேசிய பொலிஸ் ஆணைக்குழு, பணிப்பாளர் சபை உறுப்பினர், லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் சபை உறுப்பினர் போன்ற பல பதவிகளை வகித்துள்ளார்.











திரு. மவாஹிப் மௌஜூத்

2020 - 2023

திரு. மஞ்சுள டி சில்வா 2015 இல் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவராக இணைந்தார். அவர் இதற்கு முன்பு பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும், HNB அஷ்யூரன்ஸின் நிர்வாக பணி்பாளராகவும், பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும், பொது தொழில்முயற்சி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார். முகாமைத்துவ கணக்காளர் பட்டய நிறுவனத்தின் முன்னாள் தலைவராகவும் மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் வட ஆபிரிக்கா பிராந்தியத்திற்கான பிராந்திய சபை தலைவராகவும், இலங்கை காப்புறுதிச் சங்கம் மற்றும் இலங்கை யுனிட் ட்ரஸ்ட் சங்கம் ஆகியவற்றின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் அவர் காப்புறுதி தொடர்பான செயற்குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.










திரு. மஞ்சுள டி. சில்வா

2015 - 2019

திரு. விதானகாமாச்சி அவர்கள் திறைசேரியின் பிரதிச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2013 இல் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தில் இணைந்தார். இவர் இதற்கு முன்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும், மக்கள் வங்கி, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள், டெலிகொம் மற்றும் லங்கா சதொச, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றின் சபை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். அவரது பதவிக் காலத்தில், தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் செயற்பாடுகளை வடிவமைத்த பல கொள்கை முடிவுகளை எடுக்க அவர் தனது அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தினார்.












திரு. டி. விதானகாமாச்சி

2013 - 2014

திரு. ஏ.கே. செனவிரத்ன தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவராக 2012 இல் இணைந்தார். இதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டு முதல் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் சபை உறுப்பினராக பணியாற்றினார். இலங்கை தேசிய வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதில் அவருக்கு விரிவான அனுபவம் உள்ளது. மேலும், அவர் ஆயுர்வேத கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கையின் பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் சபைகளிலும் பணியாற்றியுள்ளார். அவரது தலைமையின் கீழ், மறுகாப்புறுதி சதவீதம் 20% இலிருந்து 30% ஆக அதிகரிக்கப்பட்டது, இது நாட்டிற்குள் வெளிநாட்டு நாணயத்தைத் தக்கவைக்க பங்களித்தது.












திரு. ஏ.கே. செனவிரத்ன

2012 - 2013

திரு. சேனக அபேகுணசேகர 2010 ஆம் ஆண்டு தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தில் இணைந்தார். மற்றும் ஹம்பாந்தோட்டை கிளையை திறப்பது உட்பட பெரிய துறைகளை பெற்று கிளை வலையமைப்பை அதிகரிப்பதன் மூலம் பொது காப்புறுதி வர்த்தகத்தை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தினார். தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் இலச்சினை மற்றும் "எப்போதும் நம்பிக்கை" ("Trust Forever") என்ற சுலோகத்தை உருவாக்குவதையும் அவர் முன்னெடுத்தார்.















திரு. சேனக டி. அபேகுணசேகர

2010 - 2012

திரு. ஏ.ஏ. விஜேபால 2008 இல் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தில் இணைந்தார். அவர் நிதியத்தை திறமையாக நிர்வகித்து தேவையான சில ஆட்சேர்ப்புகளை செய்தார். நாட்டின் காப்புறுதித் தேவைகளை அவர் கண்டறிந்து, புலம்பெயர் தொழிலாளர்களுக்கான காப்புறுதி மற்றும் அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைக்கான பொது காப்புறுதி வர்த்தகம் (ஆயுள் காப்புறுதி தவிர) என்பவற்றுக்கான ஏற்பாடுகளை வர்த்தமானியில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அனுராதபுரத்தில் முதல் கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார்.












திரு. ஏ.ஏ. விஜேபால

2009 - 2010

பேராசிரியர் லக்ஷ்மன் ஆர். வட்டவல 2008 இல் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவராக இணைந்தார். முன்னதாக, அவர் அரச சுரங்க மற்றும் கனிம அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளராகவும், மக்கள் வங்கி மற்றும் பீப்பள் மேர்ச்சன்ட் வங்கியின் தலைவராகவும், பான் ஏசியா வங்கி தலைவராகவும், மற்றும் ஒரு நிதி, வெளிநாட்டு முதலீடு மற்றும் கல்வி ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார். தனது விரிவான அனுபவத்தையும் அறிவையும் பயன்படுத்தி, அவர் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தார்.












பேராசிரியர் லக்ஷ்மன் ஆர். வட்டவல

2008 - 2009

இலங்கை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் மற்றும் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகிய பதவிகளை வகித்த இவர், 2006 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் முதல் தலைவராக இணைந்தார். தேவையான ஊழியர்களை நியமிப்பது, தேவையான வளங்களைக் கண்டறிவது மற்றும் அக்ரஹார உரிமைகோரல் முகாமைத்துவ முறையை அறிமுகப்படுத்துவது ஒரு பெரிய பணியாக இருந்தது. இருப்பினும், அவர் இந்த சவால்களை வெற்றிகரமாக கடந்தார். அவர் ஒரு கல்வியாளர், பொருளாதார நிபுணர், பேச்சாளர், எழுத்தாளர், வழக்கறிஞர், பேச்சாளர், நிர்வாகி மற்றும் அரசியல்வாதி ஆவார்.










பேராசிரியர் ஜகத் விக்கிரமசிங்க

2007 - 2008

NITF ACT

ஆங்கிலம்

icon

சிங்களம்

icon

திணைக்களம்

உரிமைகோர

பிரிவு





  • தொலைபேசிகள் : +94 112 026 668
  • கையடக்க தொலைபேசிகள் : +94 715 648 500
  • உடனடி அழைப்புகள் : +94 113 135 102
  • தொலைநகல் : +94 112 338 998
  • மின்னஞ்சல் : nime@nitf.lk




மோட்டார் (உரிமைகோரல்) மற்றும் மோட்டார் அல்லாத (பொது உரிமைகோரல்)

பிரிவு

  • தொலைபேசிகள் : +94 112 026 661
  • கையடக்க தொலைபேசிகள் : +94 717 388 883
  • உடனடி அழைப்புகள் : +94 716 242 242 / +94 773 768 376 / +94 702 020 220-1
  • தொலைநகல் : +94 112 333 893 / +94 114 702 667


எழுத்துறுதி

பிரிவு





  • தொலைபேசிகள் : +94 112 026 663 / +94 112 026 130
  • கையடக்க தொலைபேசிகள் : +94 778 593 665 / +94 773 055 032
  • தொலைநகல் : +94 112 421 765
  • மின்னஞ்சல் : upeksha@nitf.lk / wass@nitf.lk




மறுகாப்புறுதி

பிரிவு


  • தொலைபேசிகள் : +94 112 026 669
  • உடனடி அழைப்புகள் : +94 112 447 072
  • கையடக்க தொலைபேசிகள் : +94 714 296 622 / +94 760 526 131
  • தொலைநகல் : +94 112 328 183
  • மின்னஞ்சல் : prashan@nitf.lk / gayanibanneheka@nitf.lk



SRCC

பிரிவு


  • கையடக்க தொலைபேசிகள் : +94 714 452 692
  • மின்னஞ்சல் : era@nitf.lk












கணக்கியல் மற்றும் நிதி அறிக்கையிடல்

பிரிவு

  • தொலைபேசிகள் : +94 112 026 670 / +94 112 026 665 /+94 112 026 676
  • உடனடி அழைப்புகள் : +94 113 131 111
  • கையடக்க தொலைபேசிகள் : +94 714 285 074 / +94 716 495 534 / +94 773 223 212
  • தொலைநகல் : +94 112 338 777
  • மின்னஞ்சல் : dammika@nitf.lk / namal@nitf.lk / sisitha@nitf.lk


நிர்வாகம் மற்றும் மனிதவளம்

பிரிவு

  • தொலைபேசிகள் : +94 112 026 671
  • கையடக்க தொலைபேசிகள் : +94 718 533 939
  • மின்னஞ்சல் : jayalath@nitf.lk




தகவல் தொழில்நுட்பம்

பிரிவு


  • தொலைபேசிகள் : +94 112 026 662 / +94 112 026 650
  • மின்னஞ்சல் : gihan@nitf.lk / chathuranga@nitf.lk





உள்ளக கணக்காய்வு

பிரிவு


  • தொலைபேசிகள் : +94 112 026 674
  • கையடக்க தொலைபேசிகள் : +94 706 411 511
  • மின்னஞ்சல் : saman@nitf.lk




சந்தைப்படுத்தல்

பிரிவு


  • தொலைபேசிகள் : +94 112 026 692
  • கையடக்க தொலைபேசிகள் : +94 718 052 583
  • மின்னஞ்சல் : nuwand@nitf.lk






முதலீடு மற்றும் இடர் முகாமைத்துவம்

பிரிவு

  • தொலைபேசிகள் : +94 112 026 689
  • கையடக்க தொலைபேசிகள் : +94 716 409 953
  • மின்னஞ்சல் : sachintha@nitf.lk






இடர் முகாமைத்துவ பொறியியலாளர்















ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு

பிரிவு

  • தொலைபேசிகள் : +94 112 026 673
  • கையடக்க தொலைபேசிகள் : +94 718 693 448
  • தொலைநகல் : +94 112 338 778
  • மின்னஞ்சல் : rajith@nitf.lk





சட்ட மற்றும் சபை செயலாளர்

பிரிவு

  • தொலைபேசிகள் : +94 112 026 672
  • கையடக்க தொலைபேசிகள் : +94 767 550 708 / +94 715 736 307
  • தொலைநகல் : +94 112 331 172
  • மின்னஞ்சல் : sudarshi@nitf.lk / prathibhaw@nitf.lk



காப்புறுதி கணிப்பீடு

பிரிவு


  • தொலைபேசிகள் : +94 112 026 691
  • கையடக்க தொலைபேசிகள் : +94 772 559 189
  • மின்னஞ்சல் : gayanf@nitf.lk